தொடர்ச்சியாக இந்திய வீரர்கள் காயம்: 'Blame' என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம்- விவிஎஸ் லக்ஷ்மண்

இந்திய கிரிக்கெட் வீரர்கள் தொடர்ச்சியாக காயத்தால் அணியில் இருந்து வெளியேறுவது கவலை அளித்துள்ளது.
விவிஎஸ் லக்ஷ்மண்
விவிஎஸ் லக்ஷ்மண்
Published on

இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. இந்திய அணியில் பும்ரா மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர. இருவரும் தற்போது காயத்தால் அணியில் இருந்து விலகியுள்ளனர். மேலும், பயிற்சி ஆட்டத்தில் சுப்மன் கில் விளையாடவில்லை. ஒவ்வொரு வீரராக காயம் அடைந்து வருவதால், பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் சிறப்பு மையம் மீது குற்றம்சாட்ட தொடங்கியுள்ளனர்.

பிசிசிஐ-யின் சிறப்பு மையம் எவ்வாறு செயல்படுகிறது. உடற்தகுதி பெறாத வீரர்களை தேசிய அணியில் விளையாட அனுமதி அளிக்கிறது என பழி போடுகின்றனர். இந்த நிலையில் சிறப்பு அமையம் தலைவர் விவிஎஸ் லக்ஷ்மண், இந்திய கிரிக்கெட்டின் மருத்துவ மற்றும் தேர்வு கட்டமைப்பில் பொறுப்பேற்பது குறித்த குறைபாடுகள் இருப்பதாக எழுந்த கருத்துகளை லட்சுமண் நிராகரித்துள்ளார்.

இது தொடர்பாக விவிஎஸ் லக்ஷ்மண் கூறியதாவது:-

குற்றம் சாட்டுதல்' (blame) என்ற வார்த்தையைப் பயன்படுத்த நாம் விரும்புவதில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில், அவ்வாறு கூறும்போது யாரையாவது ஒரு பலிக்கடாவாக ஆக்குவது போன்ற சூழல் உருவாகிறது. நீங்கள் எதை உணர்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஒருவேளை பல்வேறு காரணங்களுக்காக நீங்கள் மற்றவர்கள் மீது குற்றம் சாட்டத் தொடங்கலாம்.

பிசிசிஐ சிறப்பு பயிற்சி மையம்

ஆனால், COE (சிறப்புப் பயிற்சி மையம்), அணி நிர்வாகம் ஆகிய இரண்டிற்கும் இடையில் சிறந்த ஒத்துழைப்பு இருந்து வருகிறது. அதேபோல் SSM (விளையாட்டு அறிவியல் மற்றும் மருத்துவம் ஸ்டாஃப் மற்றும் தேர்வுக்குழுவுக்கும் இடையில் சிறந்த ஒத்துழைப்பு நிலவுகிறது.

உடல் தகுதி குறித்த அறிக்கையை நாங்கள் அனுப்பும்போது, ​​தேர்வு செய்பவர் (selector) அந்த அறிக்கையைக் கேட்டு COE-ஐத் தொடர்புகொள்வார். நாங்கள் தற்போதைய உடல் தகுதி நிலையைச் சேகரித்து, தேர்வுத் குழுத் தலைவரிடம் (ஆண்கள் அல்லது பெண்கள் அணியின் தேர்வுத் குழு) அந்த அறிக்கையைச் சமர்ப்பிப்போம்; அத்துடன் இரு அணிகளின் தலைமைப் பயிற்சியாளர்கள் மற்றும் பிசிசிஐ (BCCI) ஆகியோருக்கும் அதன் நகலை அனுப்புவோம்.

பும்ரா மற்றும் சாய் சுதர்சன்

இப்போது, ​​பும்ரா மற்றும் சாய் சுதர்சன் விஷயத்தில் பார்த்தால், எப்போதும் ஒரு 'நட்சத்திரக் குறியீடு' (asterisk) இடம்பெற்றிருக்கும். பிசிசிஐ-யிடமிருந்து ஊடக அறிக்கை வரும்போது, ​​ஒரு வீரரின் தேர்வு விவரத்துடன் அக்குறியீடு இணைக்கப்பட்டிருக்கும். அந்த நட்சத்திரக் குறியீடு எதைக் குறிக்கிறது? அது உடல் தகுதிக்கு உட்பட்டது (subject to fitness) என்பதைக் குறிக்கிறது.

ஒரு வீரர் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்டார் என்று கூறுவது டெக்னிக்கலாக சரியல்ல என்று ஏனெனில், அந்த வீரர் தனது முழுமையான உடற்தகுதியை இன்னும் நிரூபிக்க வேண்டியுள்ளது என்ற நிபந்தனையுடனேயே அவர் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

அதாவது, பும்ரா மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் உடற்தகுதி அனுமதிக்கு உட்பட்டே தேர்ந்தெடுக்கப்படவிருந்தனர். அவர்களைப் பரிசோதித்து, ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு முன்னேறச் செய்வோம். ஒருவேளை முன்னேற்றம் மெதுவாக இருந்தால், அது குறித்துத் தேர்வுக்குழுத் தலைவர் மற்றும் தலைமைப் பயிற்சியாளரிடம் தகவல் தெரிவிக்கப்படும். இந்த நடைமுறை மிகச் சீராக நடைபெற்று வருகிறது. சர்வதேசத் தொடரில் பங்கேற்க அவர்கள் இன்னும் தயாராக இல்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். இச்செயல்முறைகள் எப்போதும் வீரர் மற்றும் அணியின் நலனையே மையமாகக் கொண்டவை.

உடற்தகுதிக்கு உட்பட்டது

உடற்தகுதிக்கு உட்பட்டது (subject to fitness) என்ற விஷயத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எந்தவொரு பத்திரிகைச் செய்தியிலும் சரி, உடற்தகுதி அறிக்கைகள் மற்றும் வீரர் தேர்வு ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மை உள்ளது. இந்த வீரர்கள் உடற்தகுதிக்கு உட்பட்டே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, அவர்கள் இங்கு உடற்தகுதிச் சோதனையில் தேர்ச்சி பெறாவிட்டால், அவர்களுக்குப் பதிலாக எந்த வீரர்கள் செல்வார்கள் என்பது தேர்வாளர்களுக்குத் தெரியும். இது ஒரு அடிப்படைப் புரிதல்.

இவ்வாறு விவிஎஸ் லக்ஷ்மண் தெரிவித்துள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com