

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்தியாவின் சாய் சுதர்சன் காயத்தால் விலகியுள்ளார்.
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 அன்று காலே நகரில் தொடங்குகிறது.
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பிரபல பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா காயம் காரணமாக விலகினார். அவருக்குப் பதிலாக ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த காஷ்மீர் பள்ளத்தாக்கின் முதல் வீரர் என்ற பெருமையை ஆகிப் நபி பெறுகிறார்.
சுப்மன் கில் (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், தேவ்தத் படிக்கல், சாரான்ஷ் ஜெயின், ஆகிப் நபி.
இதற்கிடையே, இந்தியா-இலங்கை இடையிலான டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் நேற்று தெரிவித்தது.
இந்நிலையில், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து காயம் காரணமாக சாய் சுதர்சன் விலகியுள்ளார் என தகவல் வெளியானது. இதனால் நம்பர் 3 இடத்துக்கான போட்டியில் யாரை களமிறக்குவது என இந்திய அணி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.