வைரலாகும் சிலிண்டர் டெலிவரி செய்யும் தந்தை வீடியோ: ரிங்கு சிங் ஓபன் டாக்

ஐபிஎல் தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் அவர் கடந்த ஆண்டு இந்தியா அணியில் இணைந்தார்.ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார்.
வைரலாகும் சிலிண்டர் டெலிவரி செய்யும் தந்தை வீடியோ: ரிங்கு சிங் ஓபன் டாக்
Published on

கடந்த ஆண்டு இந்தியா அணிக்காக அறிமுகமான ரின்கு சிங், சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் அவர் கடந்த ஆண்டு இந்தியா அணியில் இணைந்தார்.

இந்தியாவுக்காக 15 டி20 போட்டிகளில் விளையாடிய அவர் 11 இன்னிங்ஸ்களில், 356 ரன்கள் எடுத்துள்ளார். சராசரியாக 89.00 மற்றும் 176 ஸ்டிரைக் ரேட்டுடன் இரண்டு அரை சதங்களுடன் எடுத்துள்ளார்.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் அவரது தந்தை கான்சந்த் சிங் எல்பிஜி சிலிண்டர்களை டெலிவரி செய்யும் வீடியோ வைரலானது. கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற போதிலும், தனது தந்தை வேலையை விட்டு விட மறுத்தாக ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

நான் என் தந்தையிடம் நம்மிடம் போதுமான அளவு பணம் இருப்பதால் சிலிண்டர்களை எடுத்துச் செல்லாமல் ஓய்வெடுக்கச் சொன்னேன். ஆனால் அவர் அதைச் ஏற்க மறுத்து விட்டார். மேலும் அவரது வேலையை அவர் விரும்புகிறார்.

ஒருவர் வாழ்நாள் முழுவதும் உழைத்து கொண்டிருந்தால் அவரிடம் வேலையை விட்டுவிடுங்கள் என்று சொல்வது மிகவும் கடினம். அவரே நினைத்தால் மட்டும்தான் அதை விட முடியும்.

இவ்வாறு ரிங்கு சிங் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com