மருத்துவமனையில் 'சக்குதே இந்தியா' பாடலுக்கு நடனமாடிய வினோத் காம்ப்ளி- வைரல் வீடியோ

உடல்நலக் குறைவு காரணமாக வினோத் காம்ப்ளி சில தினங்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தீவிர சிகிச்சைக்கு பிறகு வினோத் காம்ப்ளி அபாய கட்டத்தை கடந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் 'சக்குதே இந்தியா' பாடலுக்கு நடனமாடிய வினோத் காம்ப்ளி- வைரல் வீடியோ
Published on: 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி உடல்நலக் குறைவு காரணமாக சில தினங்களுக்கு முன்பு மும்பையை அடுத்த தானேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைக்கு பிறகு வினோத் காம்ப்ளி அபாய கட்டத்தை கடந்து விட்டார் எனவும் அவர் உடனடியாக மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப முடியாது என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் காம்ப்ளியின் உடல்நிலை நன்கு முன்னேற்றம் அடையும் வரை கிட்டத்தட்ட ஒருமாத காலத்திற்கு அவருக்கு மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வினோத் காம்ப்ளி நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

1993-2000 க்கு இடையில் இந்தியாவுக்காக 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் வினோத் காம்ப்ளி விளையாடி உள்ளார்.

சில காலமாக உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளுடன் வினோத் காம்ப்ளி போராடி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

X