

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில், இன்று நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் வங்க தேசத்தை வீழ்த்தி 63 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.
ஜப்பானில் உள்ள கோரோகி விளையாட்டு மைதானத்தில் இன்று அதிகாலை வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் வெண்கல பதக்கத்திற்கான ஆசிய விளையாட்டு டி-20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இதையடுத்து முதலில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டனான சகான் அராச்சிகே பேட்டிங்கை தேர்வு செய்தார்.
பின்னர் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் அணியின் ஸ்கோரை உயர்த்த முடியாமல் திணறினர்.
இறுதியாக களமிறங்கிய தரிந்து ரத்நாயகே 32 பந்துகளில் 65 ரன்கள் குவித்து இலங்கை அணியை சரிவில் இருந்து மீட்டு, அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதையடுத்து 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை குவித்தது.
வங்கதேச அணி சார்பில் முஸ்தஃபிசுர் ரஹ்மான், மெகதி ஹசன் மற்றும் சைஃப் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து அலிஸ் அல் இஸ்லாம் மற்றும் ரிஷாத் ஹூசைன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணியின் பேட்ஸ்மேன்களான சைஃப் ஹசன், தான்சித் ஹசன் தமிம், கேப்டன் லிட்டன் தாஸ் மற்றும் மெகதி ஹசன் ஆகியோர் டக் அவுட்டில் வெளியேறினர்.
இதையடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், வங்கதேச அணி 17.3 ஓவர்களில் 102 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்தநிலையில் 63 ரன்களில் வெற்றி பெற்ற இலங்கை அணி, ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்றது.