இந்திய அணிக்கு அதிர்ச்சி: ஆசிய விளையாட்டு போட்டிகளில் இருந்து முக்கிய வீரர் விலகல்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வருண் சக்கரவர்த்தி விளையாடினார்.
team india
Published on
Summary

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி காயத்தால் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

ஆசிய விளையாட்டு போட்டிகள் வரும் 19-ம் தேதி ஜப்பானில் நடைபெற உள்ளது. ஷ்ரேயஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி நேரடியாக வரும் 28-ம் தேதி காலிறுதியில் விளையாடுகிறது.

வருண் விலகல்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வருண் சக்கரவர்த்தி விளையாடினார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டது.

காயத்திலிருந்து முழுமையாக குணமடைவதற்காக வருண் சக்கரவர்த்தி பெங்களூரு செல்கிறார். அங்கு மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் அவர் சிகிச்சை பெற உள்ளார்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

விப்ரஜ் நிகாம்

அவருக்கு பதிலாக விப்ரஜ் நிகாம் இந்திய அணியில் இணைந்துள்ளார்.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் வருண் சக்கரவர்த்தி விலகியுள்ளது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சுப் பிரிவுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com