

இந்திய கிரிக்கெட் அணியில் மிகவும் இளம் வயதில் அறிமுகம் ஆனவர் வைபவ் சூர்யவன்ஷி. ஐபிஎல் கிரிக்கெட்டில் அபாரமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் U19, இந்தியா `ஏ' அணிகளில் இடம் பிடித்தார்.
இளம் வயதிலேயே இந்திய சீனியர் அணியில் அறிமுகம் ஆகி சாதனைப் படைத்த சூர்யவன்ஷி, இன்று இந்தியாவில் நடைபெறும் முக்கியமான டி20 கிரிக்கெட் தொடரான சையது முஷ்டாக் அலி டிராபியில் கேப்டனாகி சாதனை படைத்துள்ளார்.
பீகார்- சவுராஷ்டிரா அணிகள் விளையாடி வருகின்றன. பீகார் அணிக்கு சூர்யவன்ஷி கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் ஆண்கள் டி20 அணிக்கு குறைந்த வயதில் கேப்டன் ஆகி சூர்வயன்ஷி சாதனைப் படைத்துள்ளார்.
சூர்யவன்ஷிக்கு 15 வயது 232 நாட்கள் ஆகிறது. இதற்கு முன்னதாக குரோஷியா நாட்டின் ஜாக் வுகுசிக் 17 வயது 311 நாட்களில் கேப்டனாக பொறுப்பேற்றார். அந்த சாதனையை சூர்யவன்ஷி முறியடித்துள்ளார்.
இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகி, ஐந்து மாதத்திற்குள் பீகார் அணியின் கேப்டனாக உயர்ந்துள்ளார். இவருடைய அதிரடியால் இந்தியா 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
இருந்தபோதிலும் 12 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவர் இந்த தொடரில் இன்னும் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடுவார். ஆசியா ரைசிங் ஸ்டார்ஸ் எமர்ஜிங் தொடர் தோஹாவில் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. இதில் விளையாடுவதற்காக சென்று விடுவார்.
இவர் சமீபத்தில் முடிவடைந்த நியூசிலாந்துக்கு ஏதிரான டி20 தொடரில் இடம் பிடித்திருந்தார். இந்தியா 3-2 எனத் தொடரை கைப்பற்றியது. இவர் ஒரு போட்டியில் 19 பந்துகளில் 45 ரன்கள் விளாசினார். அபிஷேக் சர்மா உடன் இணைந்து 7.1 ஓவர்களில் 133 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.