இலங்கைக்கு எதிரான காலே டெஸ்ட்: முதல் இரட்டை சதமடித்து அசத்திய கவாஜா

உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுக்கு 475 ரன்கள் எடுத்துள்ளது.கவாஜா 204 ரன்னும், ஜோஷ் லிங்கிஸ் 44 ரன்னும் எடுத்துள்ளனர்.
இலங்கைக்கு எதிரான காலே டெஸ்ட்: முதல் இரட்டை சதமடித்து அசத்திய கவாஜா
Published on

காலே:

இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்களான கவாஜா, டிராவிஸ் ஹெட் இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடி அரைசதமடித்து 57 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லபுசேன் 20 ரன்னில் ஆட்டமிழந்தார்.

3வது விக்கெட்டுக்கு ஸ்டீவன் ஸ்மித் கவாஜாவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் நிலைத்து நின்று ஆடி சதமடித்து அசத்தினர்.

முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுக்கு 330 ரன்கள் எடுத்தது. கவாஜா 147 ரன்னும், ஸ்மித் 104 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இந்நிலையில், 2வது நாள் இன்று நடந்து வருகிறது. சிறப்பாக ஆடிய ஸ்மித் 141 ரன்னில் அவுட்டானார். 3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 266 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய கவாஜா இரட்டை சதமடித்து அசத்தினார். உணவு இடைவேளையில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுக்கு 475 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. கவாஜா 204 ரன்னும், ஜோஷ் லிங்கிஸ் 44 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com