மகளிர் பிரீமியர் லீக் ஏலம்: ஆஸ்திரேலிய கேப்டனை 1.10 கோடிக்கு எடுத்த உ.பி.வாரியர்ஸ்

வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான ஏலம் கொச்சியில் இன்று நடைபெறுகிறது.
sophie molineux
Published on: 
Summary

கொச்சியில் நடந்த 5-வது மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் சோபி மோலினக்ச்சை உ.பி.வாரியர்ஸ் அணி 1.10 கோடி ரூபாய்க்கு எடுத்தது.

5-வது மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 14 முதல் பிப்ரவரி 17 வரை நடைபெற உள்ளது என்றும்,

வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான ஏலம் அக்டோபர் 28-ம் தேதி கொச்சியில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்தது.

நடப்பாண்டு சாம்பியனாக ராயல் சேலஞ்சர்ஸ் அணி உள்ளது. ஐந்தாவது சீசனிலும் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், மகளிர் பிரீமியர் லீக் தொடரின் வீராங்கனைகள் ஏலம் கொச்சியில் இன்று நடந்தது.

ஆஸ்திரேலிய கேப்டன் சோபி மோனிலக்சை 1.10 கோடி ரூபாய்க்கு உபி வாரியர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

இந்தியாவின் ஸ்நே ரானா, சுஷ்மா வர்மா, ஆஸ்திரேலியாவின் கிரேஸ் ஹாரிஸ் ஆகியோரை தலா 30 லட்சத்துக்கு உ.பி.வாரியர்ஸ் அணி எடுத்துள்ளது.

இந்தியாவின் கிரண் நவ்கிரேவை 75 லட்சம் ரூபாய்க்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

இந்தியாவின் குணாளன் கமலினியை 40 லட்சத்துக்கு குஜராத் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

கடந்த ஆண்டு நடந்த ஏலத்தில் இந்தியாவின் தீப்தி சர்மாவை அதிகபட்சமாக ரூ.3.20 கோடிக்கு உ.பி.வாரியர்ஸ் அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com