அதிவேகத்தில் பந்து வீசிய உம்ரான் மாலிக்...பல அடி தூரம் பறந்த பெய்ல்ஸ்

இந்த போட்டியில் உம்ரான் மாலிக் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது.
அதிவேகத்தில் பந்து வீசிய உம்ரான் மாலிக்...பல அடி தூரம் பறந்த பெய்ல்ஸ்
Published on

புனே:

இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 போட்டி புனேவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹர்தி பாண்ட்யா பந்துவீச்சை தேர்வுசெய்தார்.

அதன்படி களமிறங்கிய இலங்கை அணி இந்திய அணியின் பந்து வீச்சை அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் சேர்த்தது. இந்த இமாலய இலக்கை துரத்திய இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

இதனால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது. இந்த போட்டியில் உம்ரான் மாலிக் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதில் 2 விக்கெட் போல்ட் முறையில் எடுக்கப்பட்டது. அதில் ஒரு போல்ட் விக்கெட்டின் போது பெய்ல்ஸ் கீப்பரை தாண்டி விழுந்தது. இந்த விக்கெட்டின் வீடியோவை ரசிகர் ஒருவர் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com