U-19 ஆசிய கோப்பை கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்

ஹம்சா ஜாஹூர்
ஹம்சா ஜாஹூர்
Published on: 
Summary

பாகிஸ்தான் வீரர் ஹம்சா ஜகூர் நிலைத்து நின்று விளையாட இந்தியா தோல்வியை தழுவியது

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஓமனில் நடந்து வருகிறது. வரும் 14-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகளில் மோதுகின்றன.

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். முதல் லீக் போட்டியில் இந்திய அணி நேபாளத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தியா-பாகிஸ்தான் மோதல்

இந்நிலையில், இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர். அதிரடி வீரரான ஆர்யவீர் சேவாக் 22 ரன்னில் அவுட்டானார்.

சதமடித்த அர்ஜுன் ராஜ்புத்

ஒரு கட்டத்தில் இந்திய அணி 86 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

6வது விக்கெட்டுக்கு அர்ஜுன் ராஜ்புத் உடன் மானல் சவுகான் இணைந்து பொறுப்புடன் ஆடி 64 ரன்கள் சேர்த்தார்.

ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் சிறப்பாக ஆடிய அர்ஜுன் ராஜ்புத் சதமடித்து அசத்தினார். அவர் 85 பந்தில் 107 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இறுதியா இந்திய அணி 46.3 208 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

209 ரன்கள் இலக்கு

பின்னர் 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. குறைந்த இலக்கு என்றாலும் இந்திய இளைஞர்கள் சிறப்பாக பந்து வீசினர். இதனால் 61 ரன்களுக்கும் 5 விக்கெட்டுகளை சாய்த்தனர். 6-வது விக்கெட்டுக்கு அப்பாஸ் தார் உடன் ஹம்சா ஜஹூர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. குறிப்பாக ஜஹூர் நங்கூரமாக நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அப்பாஸ் தார் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜாஹூர் அரைசதம் கடந்து அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார். ஜாஹூர்- அப்பாஸ் தார் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

ஜாஹூர் சதம்

அடுத்து வந்த முகமகது சய்யாம் 4 ரன்களில் வெளியேறினார். ஜாஹூரை வீழ்த்தினால் வெற்றி பெற்று விடலாம் என அவரது விக்கெட்டை வீழ்த்த இந்திய பந்து வீச்சாளர்கள் எவ்வளவோ முயற்சி செய்தனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

இறுதியா பாகிஸ்தான் 47.5 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹம்சா ஜாஹூர் சரியாக 108 பந்தில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய இளைஞர்களில் மனால் சவுகான் 10 ஓவர்களில் 32 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மோஹித் உல்வா 45 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

X