கரீபியன் ப்ரீமியர் லீக் கோப்பையை வென்றது ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி

இறுதிப்போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் -ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின நைட் ரைடர்ஸ் அணி 18 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
கரீபியன் ப்ரீமியர் லீக் கோப்பையை வென்றது ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி
Published on

கரீபியன் பிரீமியர் லீக் வெஸ்ட் இண்டீஸில் கடந்த ஆகஸ்டு 14-ந் தேதி தொடங்கியது.

இந்த தொடரின் இறுதிப்போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியை ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொண்டது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் அடித்தது.

இதனையடுத்து 131 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 18 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

இதன்மூலம் 5 ஆவது முறையாக கரீபியன் ப்ரீமியர் லீக் கோப்பையை வென்று நிக்கோலஸ் பூரன் தலைமையிலான ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி சாதித்துள்ளது.

கரீபியன் பிரீமியர் லீக்க்கின் தொடர் நாயகன் விருதை ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி வீரர் பொல்லார்டு வென்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com