டிஎன்பிஎல்: அதிரடியில் மிரட்டிய சச்சின்: 201 ரன்கள் குவித்தது கோவை கிங்ஸ்

டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
kovai kings
Published on

திருச்சி அணிக்கு எதிரான போட்டியில் கோவை கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 201 ரன்கள் குவித்துள்ளது.

10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது.

திருச்சி கிராண்ட் சோழாஸ்

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 20-வது லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருச்சி அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, கோவை கிங்ஸ் அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே அந்த அணி அதிரடியில் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

சச்சின் அதிரடி

3வது களமிறங்கிய பாலசுப்ரமணியன் சச்சின் அதிரடியில் மிரட்டினார். அவர் 45 பந்தில் 4 சிக்சர், 6 பவுண்டரிகளை விளாசினார்.

6-வது விக்கெட்டுக்கு இணைந்த சச்சின் - மாதவ பிரசாத் ஜோடி சூறாவளியாய் சுழன்றடித்தது. இந்த ஜோடி 43 பந்தில் 75 ரன்கள் குவித்தது.

இறுதியில், கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்களைக் குவித்தது. மாதவ பிரசாத் 38 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.

இதையடுத்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்குகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com