

பாகிஸ்தானில் நடைபெற்று வந்த முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை அணிகள் மோதிய இந்த தொடரில் பாகிஸ்தான் இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இலங்கை கமிந்து மெண்டிஸ் (131) சதத்தால் 8 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் குவித்தது. பவன் ரத்நயகே 77 ரன்கள் சேர்த்தார்.
பின்னர் 326 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. தொடக்க வீரர் பஹர் ஜமான் ஒரு பக்கம் நிலைத்து நிற்க, முறுமுனையில் மாஸ் சதாகத் (5), பாபர் அசாம் (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
3-வது விக்கெட்டுக்கு பஹர் ஜமான் உடன் சாத் பைக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சாத் பைக் 75 பந்தில் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பஹர் ஜமான் 84 பந்தில் 9 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 127 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சல்மான் ஆகா 17 ரன்களில் ஏமாற்றம் அடைந்தார். 6-வது விக்கெட்டுக்கு ஹசன் நவாஸ் உடன் அராபத் மின்ஹாஸ் ஜோடி சேர்ந்தார். அப்போது பாகிஸ்தான் 36.5 ஓவரில் 230 ரன்கள் எடுத்திருந்தது. 79 பந்துகளில் 95 ரன்கள் தேவைப்பட்டது.
இருவரும் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் செல்ல முயற்சித்தனர். ஆனால், இலங்கை பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் பாகிஸ்தானுக்கு கடைசி 5 ஓவரில் 46 ரன்கள் தேவைப்பட்டது.
ஹசன் நவாஸ், அரபாத் மின்ஹாஸ் நம்பிக்கையுடன் விளையாடினர். இதனால் பாகிஸ்தான் இலக்கை நோக்கி சென்றது. 46-வது ஓவரில் அராபத் மின்ஹாஸ் சிக்ஸ் விளாசினார். 47-வது ஓவரில் மற்றொரு சிக்ஸ் விளாசினார்.
கடைசி 3 ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரின் முதல் பந்தில் அராபத் மின்ஹாஸ் சிக்ஸ் விளாசினார். 2-வது பந்திலும் சிக்ஸ் விளாசினார். இதனால் பாகிஸ்தான் வெற்றி எளிதானது. அத்துடன் அராபத் மின்ஹாஸ் 29 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 57 ரன்கள் விளாசினார். அத்துடன் அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 31 பந்தில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் பஹீம் ஆட்டமிழந்தார்.
பின்னர் 48.3 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 331 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.