முத்தரப்பு டி20 தொடர் இறுதிப்போட்டி: ஜிம்பாப்வேவுக்கு 206 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா

பிரெவிஸ் 23 பந்துகளில் 32 ரன்களும் எடுத்தார்.
தென் ஆப்பிரிக்கா
தென் ஆப்பிரிக்கா
Published on
Summary

முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டியில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா 205 ரன்களை சேர்த்துள்ளது.

நமீபியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 28-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகள் இன்று விளையாடி வருகின்றன.

நமீபியாவின் தலைநகரான விண்ட்ஹோக்கில் உள்ள மைதானத்தில் நடந்து வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது தென்னாப்பிரிக்கா.

தொடக்க ஆட்டக்காரர்களான ஜோர்டன் ஹெர்மன் 29 பந்துகளில் 53 ரன்களும், கானர் 23 பந்துகளில் 32 ரன்களும் சேர்க்க டிவால்ட் பிரெவிஸ் 23 பந்துகளில் 32 ரன்களும் எடுத்தார்.

ஜோர்டானின் சகோதரரான ரூபின் ஹார்மன் 16 பந்துகளில் 27 ரன்களும், டுவேன் ஜான்சன் 14 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 23 ரன்களும் எடுத்தார்.

தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களை எட்டியுள்ளது. ஜிம்பாப்வே 206 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும்.

நமீபியா-தென் ஆப்பிரிக்கா

முன்னதாக நேற்று நடந்த 6வது லீக் ஆட்டத்தில் நமீபியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற நமீபியா அணி பவுலிங் தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்கா 228 ரன்கள் குவித்தது.

229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நமீபியா களமிறங்கியது.

ஆனால் நமீபியா 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 217 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com