#T20WorldCup இறுதிப்போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் - பிட்ச் குறித்து பேசிய சூர்யகுமார்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அக்சர் படேல் நீக்கப்பட்டார்.அரை இறுதியில் அக்சர் படேல் பிடித்த 2 கேட்ச் மிக முக்கியமானது
#T20WorldCup இறுதிப்போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் - பிட்ச் குறித்து பேசிய சூர்யகுமார்
Published on

இந்தியா மற்றும் இலங்கை ஆகியவை இணைந்து நடத்தும் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, சொந்த மண்ணில் மீண்டும் கோப்பையை வென்று சாதனை படைக்கக் காத்திருக்கிறது.

இந்நிலையில், இறுதிப்போட்டி குறித்து இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:-

இறுதிப்போட்டி நடைபெறும் அகமதாபாத் ஸ்டேடியத்தில் பனி முக்கிய பங்கு வகிக்கும். இதனால் டாஸ் முக்கியத்துவம் பெற்றிருக்கும். 2-வது இன்னிங்சில் பனி பெய்யக்கூடும். இதனால் 2-வது பேட்டிங் செய்தால் கூடுதலான நன்மை கிடைக்கும். நாங்கள் பலம் வாய்ந்த அணிகளுடன், அதிகமான பனிக்கு மத்தியில் சர்வதேச போட்டியில் விளையாடி இருக்கிறோம்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அக்சர் படேல் நீக்கப்பட்டார். இது அவருக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. இது தனிப்பட்ட முடிவல்ல. நானும், கம்பீரும் முடிவு செய்து போட்டிக்கு ஏற்றவாறு அவரை நீக்கினோம். அரை இறுதியில் அவர் பிடித்த 2 கேட்ச் மிக முக்கியமானது" என்று கூறினார்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com