இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 5வது டி20 போட்டி: மழையால் டாஸ் தாமதம்

மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
rain
Published on: 
Summary

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 5-வது டி20 போட்டியில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றியது.

அடுத்து நடந்த முதல் டி20 போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் ஷாய் ஹோப் அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. 3-வது போட்டியில் இந்திய அணி மீண்டும் வெற்றிது. 4-வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரை 2-2 என சமனிலை வகிக்கிறது.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 5-வது டி20 போட்டி பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டியில் ஷ்ரேயஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.

இந்நிலையில், மழை பெய்து வருவதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com