டிஎன்பிஎல்: முதலாவது தகுதி சுற்றுப் போட்டி மழை காரணமாக ரத்து

மதுரை, திருச்சி, கோவை மற்றும் திருப்பூர் என நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.
TNPL
Published on

டி.என்.பி.எல். தொடரின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் மதுரை பாந்தர்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் நேற்று இரவு மோதின.10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிக்கட்ட போட்டிகள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடந்து வருகிறது.

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று போட்டிகள் நிறைவடைந்தது. பிளே ஆப் சுற்று புள்ளிகள் பட்டியலில் 10 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த மதுரை பாந்தர்ஸ், 10 புள்ளிகளுடன் 2-ஆவது இடம் பிடித்த திருச்சி கிராண்ட் சோழாஸ், 8 புள்ளிகளுடன் 3வது இடம்பிடித்த கோவை கிங்ஸ், 8 புள்ளிகளுடன் 4வது இடம் பிடித்த திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.

டாஸ்:

இந்த நிலையில், நேற்று இரவு தொடங்கிய முதலாவது பிளே ஆஃப் சுற்று போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முதலாவது பிளே ஆஃப் சுற்றுப் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் களமிறங்கின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

ஆட்டம் ரத்து:

இதனால் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரரான ராஜ்குமார் அபாரமாக ஆடினார். இவருடன் களமிறங்கிய கேப்டன் சுரேஷ் குமார் 1 ரன்ளுக்க தனது விக்கெட்டை பறிக்கடுத்தார்.

பின்னர் களமிறங்கிய ஷியாம் சுந்தர் 3 ரன்கள் எடுத்தார். திருச்சி அணி 4.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்திருந்த போது அப்போது மழை குறுக்கிட்டது.

இடைவிடாமல் மழை பெய்ததால், போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

எலிமினேட்டர் போட்டி:

பிளே ஆஃப் சுற்றில் நாளை நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் திருச்சி அணியை எதிர்கொள்ளும்.

இரண்டாவது தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணியை எதிர்கொள்ளும். இறுதிப் போட்டி ஆகஸ்ட் 28-ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com