

டி.என்.பி.எல். தொடரின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் மதுரை பாந்தர்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றுடன் லீக் சுற்றுகள் நிறைவடைந்தன.
புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த மதுரை பாந்தர்ஸ், 10 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்த திருச்சி கிராண்ட் சோழாஸ், 8 புள்ளிகளுடன் 3வது இடம்பிடித்த கோவை கிங்ஸ், 8 புள்ளிகளுடன் 4வது இடம் பிடித்த திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.
நெல்லை ராயல் கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், சேலம் ஸ்பர்டன்ஸ் ஆகிய அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
முதல் தகுதிச்சுற்று போட்டி இன்று நடைபெறுகிறது. எலிமினேட்டர் சுற்று போட்டி நாளை நடைபெறுகிறது. இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி 26ம் தேதி நடைபெறுகிறது. இறுதிப்போட்டி 28-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், டிஎன்பிஎல் தொடரில் இன்று முதல் பிளே ஆப் சுற்று போட்டிகள் தொடங்குகின்றன.
இன்று நடக்கும் முதலாவது தகுதிச்சுற்று போட்டியில் மதுரை பாந்தர்ஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் இரவு 7.30 மணிக்கு மோதுகின்றன.
நாளை நடைபெறும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்றில் கோவை கிங்ஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோத உள்ளன.