டி.என்.பி.எல்.: திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மதுரை பேந்தர்ஸ்

டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
MP Batting
Published on

10-ஆவது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முறை தொடரின் அனைத்து போட்டிகளும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற 15-ஆவது லீக் ஆட்டத்தில் மதுரை பேந்தர்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, மதுரை பேந்தர்ஸ் முதலில் பேட்டிங் செய்தது.

அதிரடி தொடக்கம்:

மதுரை அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய ராம் அரவிந்த் 15 பந்துகளில் 40 ரன்களை (3 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) குவித்தார். இவருடன் களமிறங்கிய சத்தார்த் மகாதேவன் 17 பந்துகளில் 22 ரன்களை (3 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்தார். என்.எஸ். சதுர்வேத் 31 பந்துகளில் 42 ரன்களை (3 பவுண்டரிகள், 1 சிக்சர்) அடித்தார்.

அடுத்து களமிறங்கியவர்களில் அத்திக் உர் ரஹ்மான் 19 பந்துகளில் 26 ரன்களை அடித்தார். பி சரவணன் 11 பந்துகளில் 12 ரன்கள் (1 சிக்சர்), குர்ஜப்நீத் சிங் 6 பந்துகளில் 13 ரன்கள் (1 பவுண்டரி, 1 சிக்சர்) அடித்தார். 18 ஓவர்கள் முடிவில் மதுரை பேந்தர்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை குவித்தது.

திண்டுக்கல் டிராகன்ஸ் சார்பில் சந்தீப் வாரியர் மற்றும் விஜு அருள் தலா 2 விக்கெட்டுகளையும், புவனேஸ்வரன் 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com