டி.என்.பி.எல்.: திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மதுரை அணி அபார வெற்றி

டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
Madurai Panthers
Published on

10-ஆவது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முறை தொடரின் அனைத்து போட்டிகளும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற 15-ஆவது லீக் ஆட்டத்தில் மதுரை பேந்தர்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, மதுரை பேந்தர்ஸ் முதலில் பேட்டிங் செய்தது.

அதிரடி தொடக்கம்:

மதுரை அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய ராம் அரவிந்த் 15 பந்துகளில் 40 ரன்களை (3 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) குவித்தார். இவருடன் களமிறங்கிய சத்தார்த் மகாதேவன் 17 பந்துகளில் 22 ரன்களை (3 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்தார். என்.எஸ். சதுர்வேத் 31 பந்துகளில் 42 ரன்களை (3 பவுண்டரிகள், 1 சிக்சர்) அடித்தார்.

அடுத்து களமிறங்கியவர்களில் அத்திக் உர் ரஹ்மான் 19 பந்துகளில் 26 ரன்களை அடித்தார். பி சரவணன் 11 பந்துகளில் 12 ரன்கள் (1 சிக்சர்), குர்ஜப்நீத் சிங் 6 பந்துகளில் 13 ரன்கள் (1 பவுண்டரி, 1 சிக்சர்) அடித்தார். 18 ஓவர்கள் முடிவில் மதுரை பேந்தர்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை குவித்தது.

திண்டுக்கல் டிராகன்ஸ் சார்பில் சந்தீப் வாரியர் மற்றும் விஜு அருள் தலா 2 விக்கெட்டுகளையும், புவனேஸ்வரன் 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

டிராகன்ஸ் ஏமாற்றம்:

சற்றே கடின இலக்கை துரத்திய திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு ஓரளவு நல்ல தொடக்கம் கிடைத்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய சிவம் சிங் 26 பந்துகளில் 40 ரன்களையும் (4 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்), வி.கே. வினீத் 19 பந்துகளில் 28 ரன்களையும் (4 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கியவர்களில் விமல் குமார் மற்றும் மோகித் மிட்டன் தலா 17 ரன்களும், ஹூனி சைனி 20 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். போட்டியின் முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதனால், மதுரை பேந்தர்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திண்டுக்கல் டிராகன்ஸ் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரோஹன் பத்ரா 2 விக்கெட்டுகளையும், குர்ஜப்நீத் சிங், சரவணன், கணேஷன் பெரியசாமி மற்றும் ராஜலிங்கம் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com