TNPL: திருச்சி கிராண்ட் சோழாஸை துவம்சம் செய்த கோவை கிங்ஸ் - 116 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

திருச்சி அணி 16.1 ஓவர்களில் 85 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
TNPL
TNPL
Published on

10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4ஆம் தேதி தொடங்கியது.

முதற்கட்ட போட்டிகள் திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ்

நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய 20-வது லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருச்சி அணி பவுலிங் தேர்வு செய்தது.

கோவை கிங்ஸ்

அதன்படி, கோவை கிங்ஸ் அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே அந்த அணி அதிரடியில் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

3வது களமிறங்கிய பாலசுப்ரமணியன் சச்சின் அதிரடியில் மிரட்டினார். அவர் 45 பந்தில் 4 சிக்சர், 6 பவுண்டரிகளை விளாசினார்.

6-வது விக்கெட்டுக்கு இணைந்த சச்சின் - மாதவ பிரசாத் ஜோடி சூறாவளியாய் சுழன்றடித்தது. இந்த ஜோடி 43 பந்தில் 75 ரன்கள் குவித்தது.

இறுதியில், கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்களைக் குவித்தது. மாதவ பிரசாத் 38 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார்.

இதையடுத்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்கியது.

திருச்சி கிராண்ட் சோழாஸ்

ஆனால் கோவை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திருச்சி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் திருச்சி அணி 16.1 ஓவர்களில் 85 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

வெற்றி

இதன் மூலம் கோவை கிங்ஸ் அணி 116 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கோவை கிங்ஸ் அணி நடப்பு டிஎன்பிஎல் தொடரில் தனது 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com