உஸ்மான் தாரிக் பந்து வீச 500 வருடங்கள் ஆகும்- டிம் டேவிட் கிண்டல்

அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.பாகிஸ்தான் பந்து வீச்சாளார் உஸ்மான் தாரிக் பந்து வீச்சு பெரிய அளவில் பேசப்பட்டது.
உஸ்மான் தாரிக் பந்து வீச 500 வருடங்கள் ஆகும்- டிம் டேவிட் கிண்டல்
Published on

டி20 உலகக் கோப்பை தொடரின் 12-வது லீக் போட்டியில் பாகிஸ்தான், அமெரிக்கா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 190 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய அமெரிக்கா அணி 158 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் பந்து வீச்சாளார் உஸ்மான் தாரிக் பந்து வீச்சு பெரிய அளவில் பேசப்பட்டது. அவரது பந்து வீச்சு ஸ்டைலை ரசிகர்கள் அவரை போலவே செய்து காட்டி கொண்டாடினர்.

இந்நிலையில் இந்த பந்து வீச்சாளர் குறித்து ஒரு வார்த்தையில் பதிலளிக்க வேண்டுமென சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த பதிவுக்கு ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிம் டேவிட் அளித்த பதில் வைரலாகி வருகிறது. அதில் சகோதரர் பந்து வீச 500 வருடங்கள் ஆகுது. ஆனாலும் கடைசியில் பந்தை வீசி விடுவார் என கிண்டாலாக பதிவிட்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் அதிரடி ஆட்டக்காரர் டிம் டேவிட் இடம்பெற்றுள்ளார். இருப்பினும், தசைநார் காயம் காரணமாக பிப்ரவரி 11 அன்று நடைபெறும் அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் அவர் விளையாடவில்லை எனபது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com