அடிடாஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம்- இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய பயிற்சி ஜெர்சி அறிமுகம்

புதிய கிட் ஸ்பான்சராக அடிடாஸ் நிறுவனத்துடன் பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது.புதிய பயிற்சி ஜெர்சியை வீரர்கள், பயிற்சியாளர்கள் அணிந்து இருக்கும் புகைப்படத்தை பிசிசிஐ வெளியீடு.
அடிடாஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம்- இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய பயிற்சி ஜெர்சி அறிமுகம்
Published on

இந்திய கிரிக்கெட் அணிக்கான கிட் ஸ்பான்சராக நைக் நிறுவனம் கடந்த 2016-ல் இருந்து 2020 வரை இருந்தது. அதைத்தொடர்ந்து 2020-ல் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கிட் ஸ்பான்சராக எம்பிஎல் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இருந்து வந்த நிலையில் அதன் ஒப்பந்தம் முடிந்தது.

இந்திய அணியின் மெயின் ஸ்பான்சராக பைஜூஸ் நிறுவனம் இருந்து வருகிறது. இந்நிலையில், புதிய கிட் ஸ்பான்சராக அடிடாஸ் நிறுவனத்துடன் பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது.

வரும் ஜூன் 7-ம் தேதி தொடங்கும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இருந்து அடிடாஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் தொடங்குகிறது.

இந்த நிலையில் அடிடாஸ் நிறுவனம் தயாரித்த இந்திய அணியின் புதிய ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது. புதிய பயிற்சி ஜெர்சியை வீரர்கள், பயிற்சியாளர்கள் அணிந்து இருக்கும் புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com