டெஸ்ட் தரவரிசை: 36 ஆண்டுக்கு பிறகு சாதித்த நியூசிலாந்து பந்துவீச்சாளர்

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் மேட் ஹென்றி 11 விக்கெட் வீழ்த்தினார்.
matt henry
Published on

ஐ.சி.சி. சார்பில் டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் சமீபத்தில் வெளியானது.

இதில் டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசைப் பட்டியலில் நியூசிலாந்தின் மேட் ஹென்றி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தின் மேட் ஹென்றி 11 விக்கெட் வீழ்த்தினார்.

இதன்மூலம் 870 புள்ளிகள் பெற்று டெஸ்ட் தரவரிசையில் பும்ராவுடன் முதலிடத்தை அவர் பகிர்ந்து கொண்டார்.

36 ஆண்டுகால வரலாற்றில் டெஸ்டில் முதலிடம் பிடித்த நியூசிலாந்து பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் மேட் ஹென்றி படைத்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com