ஆஷஸ் தொடரில் இருந்து நாதன் லயன் விலகல்

தொடர்ந்து 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடி நாதன் லயன் சாதனை படைத்திருந்தார். அவர் விலகிய நிலையில் அவருக்கு மாற்று வீரரை ஆஸ்திரேலிய அணி அறிவித்துள்ளது.
ஆஷஸ் தொடரில் இருந்து நாதன் லயன் விலகல்
Published on

ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து விளையாடிய 2-வது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியில் தொடர்ந்து 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடி சாதனை படைத்த நாதன் லயன் ஆஷஸ் தொடரில் இருந்து விலகி உள்ளார். 2-வது டெஸ்ட் போட்டியின் போது அவருக்கு காலில் அடிப்பட்டது. இதனையடுத்து அவர் ஓவர் வீசவில்லை.

2-வது இன்னிங்சின் போது மட்டும் பேட்டிங் செய்ய களமிறங்கினார். அதுவும் நொண்டி நொண்டியே ரன்களை சேர்த்தார். அவர் விலகிய நிலையில் அவருக்கு மாற்று வீரராக மர்ஃபி ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com