இலங்கை டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து தனஞ்சய டி சில்வா விலகல்

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் உடனான டி20 தொடரில் நாளை மோதவுள்ளது.
de silva
Published on: 
Summary

இலங்கை டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தனஞ்சய டி சில்வா விலகியுள்ளார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டனாக இருந்து வருபவர் தனஜ்செய டி சில்வா. இவர் 2024, ஜனவரியில் இலங்கை டெஸ்ட் அணி கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், இரண்டு ஆண்டுகளில் தனஞ்செய டி சில்வா தனது கேப்டன் பதவியை துறந்துள்ளார்.

மொத்தம் 18 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக பொறுப்பேற்ற தனஞ்சய டி சில்வா 7 போட்டிகளில் வென்றுள்ளார். 8 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளார். 3 போட்டிகளை டிராவில் முடித்துள்ளார்.

கேப்டனாக இருக்கும்போது தனஞ்செய டி சில்வா 1,130 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 36.45ஆக இருந்தது. பந்துவீச்சில் 9 விக்கெட்டும் எடுத்திருந்தார்.

கடைசியாக இந்தியா உடனான டெஸ்ட் தொடரில் 0-1 என்ற கணக்கில் இலங்கை அணி தோல்வியுற்றது.

இதுதொடர்பாக, தனஞ்செய டி சில்வா கூறுகையில், அடுத்த தலைமுறையிடம் கேப்டன் பொறுப்பு செல்ல வேண்டும் என உண்மையாகவே விரும்புகிறேன். தொடர்ந்து வீரராக விளையாடுவேன் என தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் வாரியமும் இவரது சேவைக்கு நன்றி தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் உடனான டி20 தொடரில் நாளை மோதவுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com