சர்வதேச போட்டியில் 76-வது சதம்: வீராட் கோலிக்கு தெண்டுல்கர் பாராட்டு

34 வயதான வீராட் கோலி 111-வது டெஸ்டில் 29-வது சதத்தை பதிவு செய்தார்.500-வது சர்வதேச போட்டியில் சதம் அடித்த வீராட்கோலியை கிரிக்கெட்டின் சகாப்தமான தெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.
சர்வதேச போட்டியில் 76-வது சதம்: வீராட் கோலிக்கு தெண்டுல்கர் பாராட்டு
Published on

மும்பை:

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் வீராட் கோலி அபாரமாக விளையாடி செஞ்சுரி அடித்தார்.

அவர் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டு மண்ணில் டெஸ்டில் சதம் அடித்துள்ளார். கடைசியாக 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெர்த் மைதானத்தில் செஞ்சூரி அடித்தார்.

34 வயதான வீராட் கோலி 111-வது டெஸ்டில் 29-வது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் அவர் பிராட்மேன் சாதனை சமன் செய்தார்.

பிராட்மேன் 52 டெஸ்டில் 29 செஞ்சுரி அடித்து இருந்தார். டெஸ்டில் அதிக சதம் அடித்த வீரர்களில் வீராட்கோலி, பிராட்மேனுடன் இணைந்து 16-வது இடத்தில் உள்ளார்.

சர்வதேச போட்டிகளில் வீராட்கோலி 76-வது சதத்தை தொட்டார். அவர் டெஸ்டில் 29 சதமும், ஒருநாள் போட்டியில் 46 செஞ்சுரியும், 20 ஓவர் போட்டியில் ஒரு சதமும் ஆக 76 சதத்தை எடுத்து உள்ளார்.தெண்டுல்கர் 100 சதத்துடன் (டெஸ்ட் 51+ ஒருநாள் போட்டி 49) முதல் இடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் இருக்கும் வீராட் கோலி அவரை தொடுவதற்கு இன்னும் 24 செஞ்சூரிகள் தேவை.

500-வது சர்வதேச போட்டியில் சதம் அடித்த வீராட்கோலியை கிரிக்கெட்டின் சகாப்தமான தெண்டுல்கர் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் கூறும்போது, "மற்றொரு நாள், மற்றொரு சதத்தை வீராட்கோலி எடுத்துள்ளார். அவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது" என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com