ஆஸ்திரேலியா உடனான 2வது டெஸ்ட்: டெம்பா பவுமா சதத்தால் சரிவிலிருந்து மீண்ட தென் ஆப்பிரிக்கா

7-வது விக்கெட்டுக்கு டெம்பா பவுமா, யான்சென் ஜோடி 132 ரன்கள் சேர்த்தது.
tempa bavuma
Published on: 
Summary

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் டெம்பா பவுமாவின் சிறப்பான சதத்தால் தென் ஆப்பிரிக்க அணி சரிவிலிருந்து மீண்டது.

ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்காவில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் முதல் நாளில் 12.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 20 ரன் மட்டுமே எடுத்திருந்தது.

இரண்டாம் நாளில் தென் ஆப்பிரிக்க அணி 43 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 97 ரன்களை எடுத்து தத்தளித்தது.

இந்நிலையில், இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்து வருகிறது. தொடர்ந்து ஆடிய வியான் முல்டர் 13 ரன்னில் அவுட்டானார். அப்போது தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்தது. மறுமுனையில் டெம்பா பவுமா தூணாக நின்று ஆடினார்.

பவுமா - யான்சென் ஜோடி அசத்தல்

7வது விக்கெட்டுக்கு டெம்பா பவுமா உடன் மார்கோ யான்சென் இணைந்தார். இந்த ஜோடி ஓரளவு தாக்குப் பிடித்து ஆடியது.

7வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 132 ரன்கள் சேர்த்த நிலையில் யான்சென் 85 ரன்னில் ஆட்டமிழந்தார்.

டெம்பா பவுமா சதம்

ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் மறுபுறம் டெம்பா பவுமா நிதானமாக ஆடி சதமடித்து அசத்தினார்.

தென் ஆப்பிரிக்க அணி 100 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 318 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. பவுமா 125 ரன்னும், ஹார்மர் 30 ரன்னும் எடுத்து ஆடி வருகின்றனர்.

ஆஸ்திரேலியா சார்பில் ஸ்காட் போலண்ட் 4, மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

இரண்டு நாளாக தடுமாறிய தென் ஆப்பிரிக்க அணியை டெம்பா பவுமா மீட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com