மகளிர் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

இந்தியா, இலங்கை இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது.
மகளிர் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
Published on

புதுடெல்லி:

சமீபத்தில் நடந்த ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பையை இந்திய மகளிர் அணி வென்று சாதனை படைத்தது.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இந்த மாதம் 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

அதன்படி, இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி 21-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. 2-வது போட்டி 23-ம் தேதி அதே மைதானத்தில் நடைபெற உள்ளது. 26, 28, 30 ஆகிய தேதிகளில் என கடைசி 3 போட்டிகளும் திருவனந்தபுரத்தில் நடக்கிறது.

இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணியின் விவரம் பின்வருமாறு:

ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), தீப்தி சர்மா, சினே ராணா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, ஹர்லீன் தியோல், அமன்ஜோத் கவுர், அருந்ததி ரெட்டி, கிராந்தி கவுட், ரேணுகா சிங் தாக்கூர், ரிச்சா கோஷ், ஜி.கமலினி, ஸ்ரீ சரணி, வைஷ்ணவி சர்மா.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com