வெலிங்டனில் மழை: இந்தியா- நியூசிலாந்து மோதும் டி20 போட்டி தாமதம்

மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டத்தை உரிய நேரத்தில் தொடங்க முடியவில்லை.மழை நின்ற பிறகு போட்டி மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுளள்து.
வெலிங்டனில் மழை: இந்தியா- நியூசிலாந்து மோதும் டி20 போட்டி தாமதம்
Published on

இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள், தொடர்களில் விளையாடுகிறது. இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி இந்திய நேரப்படி இன்று மதியம் 12 மணிக்கு வெலிங்டனில் தொடங்க இருந்தது.

ஆனால் அங்கு மழை பெய்ததால் போட்டியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டத்தை உரிய நேரத்தில் தொடங்க முடியவில்லை.

இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை நின்ற பிறகு போட்டி மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுளள்து.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com