சர்வதேச போட்டியில் முதல் சதத்தை பதிவு செய்தார் பிலிப் சால்ட்

டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிலிப் சால்ட் சர்வதேச போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
பிலிப் சால்ட்
பிலிப் சால்ட்
Published on

நெதர்லாந்தில் இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய்-பிலிப் சால்ட் களமிறங்கினர். 1 ரன்னில் இருந்த ராய் ஸ்னேட்டர் பந்து வீச்சில் போல்ட் ஆனார். இதனையடுத்து பிலிப் சால்ட்-டேவில் மலான் ஜோடி சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிலிப் சால்ட் சர்வதேச போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பிலிப் 1 அரை சதம் மற்றும் 1 சதம் அடித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com