பயிற்சியாளர் டிராவிட்டுக்கு தினேஷ் கார்த்திக் நன்றி

நீண்ட இடைவெளிக்கு பிறகு அணியில் இடம்பெற்று 20 ஓவர் போட்டியில் முதல் அரை சதத்தை பதிவு செய்தார். நான் விளையாடும் ஆட்ட வரிசை சிறப்பாக இருப்பதாக உணர்கிறேன்.
தினேஷ் கார்த்திக் - ராகுல் டிராவிட் 
தினேஷ் கார்த்திக் - ராகுல் டிராவிட் 
Published on

ராஜ்கோட்:

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார்.

37 வயதான அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணியில் இடம்பெற்று 20 ஓவர் போட்டியில் முதல் அரை சதத்தை பதிவு செய்தார். ஆட்ட நாயகன் விருதை பெற்ற தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-

நான் விளையாடும் ஆட்ட வரிசை சிறப்பாக இருப்பதாக உணர்கிறேன். பயிற்சியாளர் டிராவிட்க்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வீரர்களின் அறை அமைதியாக இருக்கிறது. நெருக்கடியில் எப்படி விளையாட வேண்டும் என்று கற்று கொள்வது முக்கியமானதாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com