டி20 உலகக் கோப்பை: உலக சாதனையை சமன் செய்த வில் ஜாக்ஸ்

நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் வில் ஜேக்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
டி20 உலகக் கோப்பை: உலக சாதனையை சமன் செய்த வில் ஜாக்ஸ்
Published on

இலங்கையில் நடைபெற்று வரும் 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றின் நேற்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில் ஜாக்ஸ், 'ஆட்டநாயகன்' விருதை வென்றார்.

இதன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து அணிக்காக அதிக ஆட்டநாயகன் விருதுகளை (மொத்தம் 4 விருதுகள்) வென்ற வீரர் என்ற சாதனையை வில் ஜாக்ஸ் படைத்துள்ளார்.

இதன் மூலம் கெவின் பீட்டர்சன், லூக் ரைட், ஜோஸ் பட்லர் மற்றும் அடில் ரஷித் (தலா 3 விருதுகள்) ஆகியோரின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

மேலும் ஒரு குறிப்பிட்ட உலகக் கோப்பை தொடரில் அதிகபட்சமாக 4 ஆட்டநாயகன் விருதுகளை வென்ற ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வாட்சனின் (2012-ல் படைத்த சாதனை) உலக சாதனையை வில் ஜாக்ஸ் தற்போது சமன் செய்துள்ளார்.

அடுத்த போட்டிகளில் வில் ஜாக்ஸ் மீண்டும் ஆட்டநாயகன் விருது வெல்லும் பட்சத்தில், ஷேன் வாட்சனின் உலக சாதனையை முறியடித்து புதிய சரித்திரம் படைப்பார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com