விராட் கோலி- ரோகித் சர்மாவின் அரிய சாதனையை சமன் செய்த ஆப்கானிஸ்தான் வீரர்கள்

குர்பாஸ்- இப்ராஹிம் ஜோடி உகாண்டா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக 100 ரன்கள் குவித்தது.இதற்கு முன்னதாக விராட் கோலி- ரோகித் சர்மா அடுத்தடுத்த போட்டிகளில் 100 ரன்கள் அடித்திருந்தது.
விராட் கோலி- ரோகித் சர்மாவின் அரிய சாதனையை சமன் செய்த ஆப்கானிஸ்தான் வீரர்கள்
Published on

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் உகாண்டாவை எதிர்கொண்டு அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின்போது ஆப்கானிஸ்தான் வீரர்கள் குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சேர்ந்து 100 ரன்கள் குவித்தது.

இன்று நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. முதல் விக்கெட்டுக்கு 103 ரன்கள் குவித்தது. குர்பாஸ் 80 ரன்களும், இப்ராஹிம் ஜத்ரன் 44 ரன்களும் விளாசினர்.

இதன்மூலம் டி20 உலகக் கோப்பையில் அடுத்தடுத்து இந்த ஜோடிகள் 100 ரன்கள் குவித்தது. இதற்கு முன்னதாக விராட் கோலி- ரோகித் சர்மா ஜோடி இந்த சாதனையை படைத்துள்ளது. இதன்மூலம் குர்பாஸ்- இப்ராஹிம் ஜோடி விராட் கோலி- ரோகித் சர்மா ஜோடியின் சாதனையை சமன் செய்துள்ளது.

பாபர் அசாம்- முகமது ரிஸ்வான் ஜோடி 3 முறை 100 ரன்களை கடந்துள்ளது.

கில்கிறிஸ்ட்- ஹெய்டன் ஜோடி 2 முறையும், அலேக்ஸ் ஹேல்ஸ்-மோர்கன் ஜோடி இரண்டு முறையும், ஜெயவர்தனே- சங்கக்காரா, டேவிட் வார்னர்-வாட்சன் ஜோடிகள் இரண்டு முறையும் 100 ரன்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com