டி20 உலகக்கோப்பை: ஓமன் அணியை வீழ்த்தி அயர்லாந்து அபார வெற்றி

அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் லோர்கன் டுச்செர் 94 ரன்கள் அடித்தார்.
டி20 உலகக்கோப்பை: ஓமன் அணியை வீழ்த்தி அயர்லாந்து அபார வெற்றி
Published on

டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் அயர்லாந்து - ஓமன் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதற்படி முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் லோர்கன் டுச்செர் 94 ரன்கள் அடித்தார்.

இதையடுத்து 236 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஓமன் அணி 18 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்து 96 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இதன்மூலம் இந்த உலகக்கோப்பையில் அயர்லாந்து அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com