டி20 உலகக் கோப்பை தொடர்: இந்திய அணிக்கான புதிய ஜெர்சி அறிமுகம்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.டி20 உலக கோப்பை தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்குகிறது.
டி20 உலகக் கோப்பை தொடர்: இந்திய அணிக்கான புதிய ஜெர்சி அறிமுகம்
Published on

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஞ்சியில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனை தொடர்ந்து இரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி ராய்பூரில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கான புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மைதானத்தில் ரோகித் சர்மா மற்றும் திலக் வர்மா ஆகியோர் சேர்ந்து ஜெர்சியை அறிமுகப்படுத்தினர்.

டி20 உலக கோப்பை தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com