டி20 உலகக் கோப்பையில் கலந்து கொள்ள அமெரிக்கா புறப்பட்ட வங்காளதேசம் கிரிக்கெட் அணி

டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் துவங்குகிறது. அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறுகின்றன.
டி20 உலகக் கோப்பையில் கலந்து கொள்ள அமெரிக்கா புறப்பட்ட வங்காளதேசம் கிரிக்கெட் அணி
Published on

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 2 ஆம் தேதி துவங்குகிறது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் 2024 டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

மேலும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு ஆயத்தமாகும் வகையில், அணிகள் ஒவ்வொன்றாக அமெரிக்கா புறப்பட்டன. சில தினங்களுக்கு முன்பு இலங்கை அணி அமெரிக்கா புறப்பட்டு சென்றது. அந்த வரிசையில், தற்போது ஆசிய நாடுகளில் ஒன்றான வங்காளதேசம் கிரிக்கெட் அணி அமெரிக்கா புறப்பட்டது.

அமெரிக்கா புறப்படும் முன் வங்காளதேசம் அணி வீரர்கள் அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் நஜ்முல் ஹாசனுடன் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com