டி20 உலகக் கோப்பை 2026: சூப்பர் 8 போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு

சூப்பர் 8 சுற்றின் மூன்றாவது போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. லீக் சுற்றில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் தோல்வியை சந்திக்கவில்லை.
டி20 உலகக் கோப்பை 2026: சூப்பர் 8 போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு
Published on

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்து சூப்பர் 8 சுற்றில் மொத்தம் எட்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. சூப்பர் 8 சுற்றின் மூன்றாவது போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதின.

அகமதாபாத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இரு அணிகளும் இதுவரை தோல்வியை சந்திக்காமல் இருப்பதால், இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

மேலும், கடந்த டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இவ்விரு அணிகள் களம் கண்டன. இந்த நிலையில், இன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா இந்திய அணியை பழிதீர்க்குமா அல்லது இந்திய அணியின் வெற்றிநடை தொடருமா என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com