சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நமிபியா ஆல் ரவுண்டர் ஓய்வு

எனக்கு இன்னும் 2 ஆண்டுகள் தொடர்ந்து விளையாட ஆசை தான். 39 வயதான அவர் இதுவரை 15 ஒருநாள், 54 டி20 போட்டியில் விளையாடி மொத்தம் 74 விக்கெட்டை கைப்பற்றி இருக்கிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நமிபியா ஆல் ரவுண்டர் ஓய்வு
Published on

ஆன்டிகுவா:

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நமிபியா ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் வெளியேறியது. நமிபியா அணியின் ஆல்-ரவுண்டராக வலம் வந்த டேவிட் வைஸ், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார்.

ஓய்வு குறித்து அவர் கூறியதாவது:- 

எனக்கு இன்னும் 2 ஆண்டுகள் தொடர்ந்து விளையாட ஆசை தான். ஆனால் எனது கடைசி ஆட்டத்தை உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதுவும் உலகத்தரம் வாய்ந்த இங்கிலாந்து போன்ற அணிக்கு எதிராக விளையாடியதுடன் நிறைவு செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான நேரம்.

இவ்வாறு டேவிட் வைஸ் குறிப்பிட்டார்.

39 வயதான டேவிட் வைஸ் இதுவரை 15 ஒரு நாள், 54 இருபது ஓவர் போட்டியில் விளையாடி மொத்தம் 74 விக்கெட்டை கைப்பற்றி இருக்கிறார். தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த டேவிட் வைஸ் முதலில் தங்களது சொந்த நாட்டு அணிக்காக ஆடினார். 2016-ம் ஆண்டில் நமிபியாவுக்கு இடம் பெயர்ந்த அவர் 2021-ம் ஆண்டில் இருந்து நமிபியா அணிக்காக விளையாடி வந்தது நினைவு கூரத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com