T20: மழை காரணமாக பாதியில் தடைபட்ட இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ஆட்டம்

இந்திய அணி 7.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்துள்ளது.
T20
T20
Published on: 
Summary

வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகள் இடையேயான கடைசி டி20 போட்டி மழை காரணமாக தடைபட்டது.

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது,

முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றியது.

அடுத்து நடந்த முதல் டி20 போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் ஷாய் ஹோப் அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

3-வது போட்டியில் இந்திய அணி மீண்டும் வெற்றிது. 4-வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரை 2-2 என சமனிலை வகிக்கிறது.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 5வது டி20 போட்டி பெங்களூருவில் நேற்று தொடங்கியது.

தாமதம்

இரவு 7 மணிக்கு தொடங்க வேண்டிய இந்தப் போட்டி மழை காரணமாக தாமதமாக 9 மணிக்கு தொடங்கியது.

மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், போட்டி 9 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது.

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்தியா பேட்டிங்

இந்திய அணியின் சார்பில் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா முதலில் களமிறங்கினர்.

அபிஷேக் சர்மா 6 ரன்னும், அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் 30 (10) ரன்களும், சஞ்சு சாம்சன் 16 (7) ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 22 (14) ரன்களும், திலக் வர்மா 7 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

மீண்டும் மழை

இதனிடயே மீண்டும் மழை குறுக்கிட ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்திய அணி 7.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்துள்ளது.

நமன் திர் 24 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் கீமோ பால் மற்றும் ஸ்பிரிங்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com