

அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் தமிழக வீரர் டி.நடராஜன் மீண்டும் இணைந்துள்ளார்.
இந்தியாவில் நடந்து வரும் ஐ.பி.எல். தொடரின் மூலம் சிறந்த வீரர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
அடுத்த ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலம் இந்தியாவில் நடத்தப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, 2020 முதல் 2024-ம் ஆண்டு வரை 5 ஐபிஎல் தொடர்களுக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடிய டி.நடராஜன், 2024 ஐபிஎல் தொடரில் 19 விக்கெட் கைப்பற்றியதுடன் ஐதராபாத் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதிலும் முக்கியப் பங்காற்றினார்.
2025 ஐபிஎல் ஏலத்தில் டி.நடராஜன் ரூ.10.75 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
இந்நிலையில்,டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்த டி.நடராஜனை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5 கோடி ரூபாய்க்கு டிரேட் செய்துள்ளது.
அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் ஷீன்சன் அன்சாரியை 5 கோடி ரூபாய்க்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி வாங்கியுள்ளது.