#T20WorldCup2026 கழுத்தில் மாலை... கையில் டி20 உலகக் கோப்பை... அனுமன் கோவிலில் வழிபாடு செய்த SKY- வைரல் வீடியோ

டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின.இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
#T20WorldCup2026 கழுத்தில் மாலை... கையில் டி20 உலகக் கோப்பை... அனுமன் கோவிலில் வழிபாடு செய்த SKY- வைரல் வீடியோ
Published on

டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, சஞ்சு சாம்சன் (89), அபிஷேக் சர்மா (52) மற்றும் இஷான் கிஷன் (54) ஆகியோரின் அதிரடியால் 255/5 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.

இதனைத் தொடர்ந்து பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா (4/15) மிரட்ட, நியூசிலாந்து அணி 159 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் பட்டத்தைத் தக்கவைத்த முதல் அணி, சொந்த மண்ணில் கோப்பையை வென்ற முதல் நாடு மற்றும் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற ஒரே அணி என்ற முப்பெரும் சாதனைகளை இந்தியா படைத்துள்ளது.

இந்நிலையில் டி20 உலகக்கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் ஐசிசி தலைவர் ஜெய் ஷா ஆகியோர் இன்று அதிகாலையில் நரேந்திர மோடி மைதானத்திற்கு அருகிலேயே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அனுமன் தெக்ரி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

இந்த அனுமன் கோவிலில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் கழுத்தில் மாலையுடன் கையில் கோப்பையை ஏந்தியபடி சிறப்புப் பிரார்த்தனை மேற்கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com