

இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டராகத் திகழ்ந்த அஸ்வினுக்கு சுரேஷ் ரெய்னா தமிழில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்-ரவுண்டராகத் திகழ்ந்த ரவிசந்திரன் அஸ்வின் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரரும், சி.எஸ்.கே. வீரருமான சுரேஷ் ரெய்னா, அஸ்வினுக்கு தமிழில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, சுரேஷ் ரெய்னா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியதாவது:
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அஸ்வின். இந்திய கிரிக்கெட்டின் மகத்தான சாம்பியன்களில் ஒருவர்.
உங்கள் அறிவு, துல்லியம், போராட்ட குணம் மற்றும் சாதனைகள் இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் அழியாத தடம் பதித்துள்ளன.
உங்கள் கிரிக்கெட் பாரம்பரியம் தலைமுறைகளை என்றும் ஊக்குவிக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.
அஸ்வின் மற்றும் ரெய்னா ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்து பல வெற்றிகரமான போட்டிகளில் விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.