தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக சீனிவாசராஜ் போட்டியின்றி தேர்வு

சீனிவாசராஜ் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் பொருளாளராக பணியாற்றி இருந்தார்.புதிய தலைவர் குறித்து அதிகாரப்பூர்வமாக இன்று மாலை அறிவிக்கப்படும்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக சீனிவாசராஜ் போட்டியின்றி தேர்வு
Published on

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 93-வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக டி.ஜே.சீனிவாசராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து அதிகாரப்பூர்வமாக இன்று மாலை அறிவிக்கப்படும். அவர் இதற்கு முன்பு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் பொருளாளராக பணியாற்றி இருந்தார்.

இதேபோல துணைத் தலைவராக எம்.குமரேஷ், பொருளாளராக ஆர்.ரங்கராஜன் மற்றும் 3 செயற்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

செயலாளர், இணை செயலாளர், உதவி செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. 205 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com