வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடர்; இலங்கை அணி அறிவிப்பு

முதலில் நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது.இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வரும் 20ம் தேதி தொடங்குகிறது.
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடர்; இலங்கை அணி அறிவிப்பு
Published on

கொழும்பு:

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வரும் 20ம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் தொடரின் போட்டிகள் அனைத்தும் பல்லகலேவில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சரித் அசலங்கா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் வனிந்து ஹசரங்கா, சதீரா சமரவிக்ரமா, மகேஷ் தீக்சனா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை அணியின் விவரம் வருமாறு:

சரித் அசலங்கா (கேப்டன்), அவிஷ்கா பெர்ணாண்டோ, பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ், ஜனித் லியானகே, சதீரா சமரவிக்ரமா, நிஷான் மதுஷ்கா, துனித் வெல்லாலகே, வனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்சனா, ஜெப்ரி வாண்டர்சே, சமிது விக்ரமசிங்கே, அசிதா பெர்ணாண்டோ, தில்ஷன் மதுஷன்கா, முகமது ஷிராஸ்.

X

Maalai Malar
www.maalaimalar.com