காலே டெஸ்ட்: இலங்கை வெற்றிபெற 372 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

இலங்கை அணி முதல் இன்னிங்சில் 284 ரன்கள் எடுத்தது.
rishabh pant
Published on

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற 372 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

சதமடித்த படிக்கல்

அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 462 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தேவ்தத் படிக்கல் 167 ரன்னும், கே.எல்.ராகுல் 82 ரன்னும், துருவ் ஜுரல் 51 ரன்னும் எடுத்தனர்.

இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 4 விக்கெட்டும், கேஷரா நுவந்தா 3 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

சோனல் தினுஷா சதம்

தொடர்ந்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் சோனல் தினுஷா 100 ரன்னில் அவுட்டானார். நிரோஷன் டிக்வெலா 80 ரன்னில் ஆட்டமிழந்தார்.

மானவ் சுதர் 4 விக்கெட்

இந்தியா சார்பில் மானவ் சுதர் 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

ரிஷப் பண்ட் அரை சதம்

178 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி தொடர்ந்து 2வது இன்னிங்சை தொடர்ந்தது. ரிஷப் பண்ட் மட்டும் தாக்குப்பிடித்து அரை சதம் அடித்து 66 ரன்னில் அவுட்டானார். படிக்கல் 44 ரன்னும், கே.எல்.ராகுல் 35 ரன்னும் எடுத்தனர்.

இறுதியில், இந்திய அணி 2-வது இன்னிங்சில் 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டும், லஹிரு குமாரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் 372 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com