உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்: 4வது இடத்துக்கு முன்னேறிய இலங்கை

வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.இதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி இரண்டு இடம் முன்னேறியது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்: 4வது இடத்துக்கு முன்னேறிய இலங்கை
Published on

துபாய்:

வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இலங்கை அணி முழுமையாக கைப்பற்றி அசத்தியது. இந்தத் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர்.

இந்நிலையில், இந்த தொடர் நிறைவடைந்ததும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி இன்று வெளியிட்டது.

புதிய பட்டியலின் படி 6-வது இடத்தில் இருந்த இலங்கை வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் 50 சதவீதத்துடன் 4-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

இலங்கைக்கு எதிராக தோல்வி கண்ட வங்காளதேசம் தென் ஆப்பிரிக்காவுடன் சேர்ந்து 7-வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளது.

68.51 சதவீதத்துடன் இந்தியா முதலிடத்திலும், 62.50 சதவீதத்துடன் ஆஸ்திரேலியா 2வது இடத்திலும், 50 சதவீதத்துடன் நியூசிலாந்து 3வது இடத்திலும் உள்ளது.

36.66 சதவீதத்துடன் பாகிஸ்தான் 5வது இடத்திலும், 33.33 சதவீதத்துடன் வெஸ்ட் இண்டீஸ் 6வது இடத்திலும் உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com