அசலன்கா, மதுஷ்கா அதிரடி: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றி

முதலில் நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
அசலன்கா, மதுஷ்கா அதிரடி: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றி
Published on

கொழும்பு:

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 38.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்து ஆட்டம் நிறுத்தப்பட்டது. ரூதர்போர்டு பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 74 ரன்கள் எடுத்தார். கீஸ் கார்டி 37 ரன்னும், ரோஸ்டன் சேஸ் 33 ரன்னும் எடுத்தனர்.

இதையடுத்து, மழை காரணமாக இலங்கை அணிக்கு 37 ஓவரில் 232 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க ஆட்டக்காரர் நிஷான் மதுஷ்கா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 69 ரன் குவித்தார். கேப்டன் சரித் அசலங்கா சிறப்பாக ஆடி 77 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், இலங்கை 31.5 ஓவரில் 234 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் இலங்கை 1-0 என முன்னிலை வகிக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com