முதல் டி20 போட்டி: நியூசிலாந்தை எளிதில் வீழ்த்தியது இலங்கை

முதலில் ஆடிய நியூசிலாந்து 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து ஆடிய இலங்கை 140 ரன்கள் எடுத்து வென்றது.
முதல் டி20 போட்டி: நியூசிலாந்தை எளிதில் வீழ்த்தியது இலங்கை
Published on

தம்புலா:

நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி தம்புலாவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 19.3 ஓவரில் 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பிரேஸ்வெல், சகாரி போக்ஸ் ஆகியோர் 27 ரன்கள் எடுத்தனர்.

இலங்கை அணி சார்பில் வெல்லலகே 3 விக்கெட்டும், துஷாரா, ஹசரங்கா, பதிரனா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. குசால் மெண்டிஸ் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

பதும் நிசங்கா 19 ரன்னும், குசால் பெராரா மற்றும் கமிந்து மெண்டிஸ் தலா 23 ரன்னும், பானுகா ராஜபக்ச 4 ரன்னும், ஹசரங்கா 22 ரன்னும் எடுத்தனர்.

கேப்டன் சரித் அசலங்கா பொறுப்புடன் ஆடி 35 ரன்கள் எடுத்து அணியை வெற்றிபெறச் செய்தார்.

இறுதியில், இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 140 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com